நீதி செலுத்துங்கள் , அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும் - திரு குர்ஆன்

காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ எம்..,

KAZI  A.M.M. KADER BUKSH HUSAIN SIDDIQI   M.A.,

 TOWN  KAZI ,  KILAKARAI   623517   RAMNAD DT.  TAMIL NADU - INDIA

 

Welcome to the Office of  the Town Kazi of Kilakarai

Kilakarai Kazi Home Page | Introduction | Service | Events | Kazi's Biography | Previous Kazis | Mahalli -Muthavalli | Author of Books | Jamath | Nikkah Affair | Photo Gallery | Contact Us

Kilakarai Kazi Home Page

 


                                         
காஜி பணி - கெளரவ    சிறப்பு விருது                                    
  காஜி பணி  ஏற்றமையைப்     பாராட்டி  அபுதபி   அய்மான்    கெளரவ   சிறப்பு விருது  பெறுகிறார் காஜி வழங்கியவர் : கீழக்கரை அல் ஹாஜ் கே.வி.எம்.அப்துல் கரீம் அவர்கள் (President, Majestic Foundation Chennai)உடன் வாழ்த்துபவர்கள் அல்ஹாஜ் செய்யது M .சலாஹுத்தீன், (Managing Director.,ETA,ASCON & STAR Group Dubai.)அல்ஹாஜ் M.ஷாஹுல் ஹமீது ( Managing (Director.,Noble Marine Metals Co  ,Abu Dhabi),நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரி செயலாளர் ஜனாப் ஸாதிக்,காயல் மவ்லவி அஹ்மது அப்துல் காதர் ஆலிம் , அல்ஹாஜ் ஹாஜி P.S.M. ஹபீபுல்லாஹ் (J.M.D –ETA –CARS) அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் (President UAE Quide Millat Forum)

 

காஜி அல்ஹாஜ்.எம்.எம்.  காதர் பக்ஷ் ஹுசைன் M..A.,

    கீழக்கரை அ.மு.  முஹம்மது முகைதீன்  அவர்கள்  புதல்வர் முஹம்மது  செய்யது  அஹ்மது நெய்னா- செ. மு.செ.செய்யது  காஸிம்  அவர்கள்  புதல்வி முஹம்மது ஸதக் உம்மா ஆகியோரின் புதல்வராக  ஹிஜ்ரி 1377 ரபீயுல் ஆகிர்  பிறை 13 புதன் கிழமை , 1957 நவம்பர் 05 அன்று காஜி அல்ஹாஜ் காதர் பக்ஷ் ஹுசைன் கீழக்கரையில்  பிறந்தார்.  

காஜியின் பாட்டனார்   அ.மு.முஹம்மது முஹைதீன்

  இவர் முஹம்மது லெப்பை (இவர் ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் III அவர்களின்  பேரர்  ஆவார்) மற்றும்   ஹஜ்ரத் அபூபக்கர்  ஆலிம்  லெப்பை  (இவர்களின் அடக்கத்தலம்  ஷேக் அப்பா கப்ர்  அருகில்  ஹமீதிய்யா  ஆண்கள்  மேனிலைப்பள்ளி சாலையில் அமைந்துள்ளது.)ஆகியவர்களின் பேரர் ஆவார்.
 

அ.மு.மு.முஹம்மது செய்யது அஹ்மது நெய்னா 


  இக்காஜிக்கு சன்மார்க்க  கல்வி ,சமுதாயக் களப்பணி வரலாற்று ஆர்வம் இவற்றுக்கான  அடிதத்ளத்தினை - பயிற்சியை  உண்டாக்கியவர்   இவரது  தந்தை  அ.மு.மு. முஹம்மது செய்யது அஹ்மது நெய்னா  அவர்கள் ஆவார்.

 இக்காஜியின் தந்தையாரின் தாய்வழிப்பாட்டனார் மவ்லவி முஹம்மது முகைதீன் தம்பி ஆலிம் அவரது தந்தை  ஹாபிழுல் குர் ஆன் முஹம்மது  மீரா சாஹிப் அவர்கள் ஆவார் இவர்களின் மகள் வழி பேரர்கள்தான்  11,12,13 வது காஜிகள்.

  கல்வித்தகுதிகளும் விருதுகளும்

 மதுரை  காமராஜர்  பல்கலைக்கழகத்தில்  எம்.ஏ-. முதுகலைப் பட்டம்  பெற்றவர்,  அரபித்துறையில் டிப்ளமா பெற்றவர்,

ஆலிமுல் இஸ்லாமியா விருது - வழங்கியது :   ஜாமிஆ    மிஸ்பாஹுல் ஹுதா  அரபிக் கல்லூரி,  நீடூர்.

  வள்ளல்      சீதக்காதி       நினைவுப்பரிசு  :

இப்பரிசை இஸ்லாமி      வரலாற்று  ஆய்வுக்காக பெற்றவர்.    வழங்கியவர்  :  டாக்டர்  அல்ஹாஜ்   பி.எஸ்.அப்துர் ரஹ்மான் சாஹிப்  அவர்கள்(தலைவர்  சீதக்காதி  அறக்கட்டளை)

  அய்மான் வெள்ளி விழா விருது
:

இவ்விருதை சன்மார்க்க, சமூக,  கல்விப்பணிக்காக பெற்றவர்.    வழங்கியவர் :தமிழ் நாடு துணை முதல்வர் மாண்புமிகு தளபதி டாக்டர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
 

 காஜி பணி கெளரவ    சிறப்பு விருது
 
இவ்விருதை காஜிப்பணியை    ஏற்றமையைப்     பாராட்டி      அய்மான்    கெளரவ    சிறப்பு விருது பெற்றவர். 

 வழங்கியவர் : கீழக்கரை அல் ஹாஜ் கே.வி.எம்.அப்துல் கரீம் அவர்கள் (தலைவர் மெஜெஸ்டிக்  பவுன்டேஷன் சென்னை )

  ஜும்ஆ பள்ளி மஹல்லி மிராசு - (முத்தவல்லி)

  கீழக்கரையில் சரித்திர புகழ்வாய்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் ஜும் ஆ பள்ளியை நிர்மாணம்  செய்து  வக்ப் செய்து  அதன் பாரம்பரிய மஹல்லி மிராசு- முத்தவல்லியாக அவரது நண்பரும் நகரின் 5வது காஜியுமான ஹழ்ரத் காஜி ஷேக் அப்துல்லாஹ் II  அவர்களை நியமனம் செய்தார் (இவர்களின் அடக்கத்தலம் ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் கபுரருகில்  உள்ளது ) இக்காஜியைத்தொடர்ந்து

 2-ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் III
 3-ஹழ்ரத் காஜி ஷேக் அப்துல்லாஹ் III
 4-ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் IV
 5-ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம் சாஹிப் பகதூர்
 6-ஹழ்ரத் காஜி ஹாபிழ் முஹம்மது கியாதுத்தீன்வலியுல்லாஹ்-V
 7-ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம் பாஜில் நூரிய்யி
 8-ஹழ்ரத் காஜி அல் ஹாஜ் முஹம்மது அப்துல் காதர் ஆலிம்
 ஆகியோர்  பாரம்பரிய மஹல்லி மிராசு- முத்தவல்லியாக  பொறுப்புவகித்தனர் .

8 வது மஹல்லி ஹழ்ரத் காஜி அல் ஹாஜ் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்கள் மறைவுக்குப் பின் 9 வது பாரம்பரிய மஹல்லி மிராசு- முத்தவல்லியாக  காஜி அல்ஹாஜ் காதர் பக்ஷ் ஹுசைன் பொறுப்பேற்றார்.
 

ஏர்வாடி அல் மஸ்ஜித் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளியின்  முத்தவல்லி

  ஏர்வாடி  தர்ஹாவில்  பெருவாரியான  தியாகிகள்  ஷுஹதாக்கள்  அடக்கமாகியுள்ள  காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளி அல்மஸ்ஜித் இலாஹிய்யாவின் முத்தவல்லியாக மறைந்த   ஹழ்ரத்  காஜி  முஹம்மது  இப்ராஹீம் பாஜில் நூரிய்யி அவர்கள், ஹழ்ரத் காஜி அல் ஹாஜ்  முஹம்மது அப்துல்   காதர்  ஆலிம்  அவர்கள்   ஆகியோரைத்   தொடர்ந்து  காஜி  அல்ஹாஜ்  காதர்  பக்ஷ் ஹுசைன் முத்தவல்லியாக  நிர்வகித்து வருகிரார் இப்பள்ளியில் அமைந்துள்ள அல்  மத்ரஸத்துல் இலாஹிய்யா வில் 80 பிள்ளைகள் திரு குர்ஆன் ஓதிவருகின்றனர்

  இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர் காஜியார்

  அண்ணல்  நபி  (ஸல்)  அவர்களின் பயணப்பகுதிகள், அண்ணல் நபி ( ஸல்) அவர்களின் தோழர்களான  அருமை சஹாபா பெருமக்கள்   சென்ற   வென்ற   இடங்கள் பிராந்தியங்கள் இவற்றினை  நேரிடையாக சென்று  ஆய்வு செய்துவருகிறார்.

  அரபுக்கடல் முதல் மத்திய  தரைக்கடல் வரையும், செங்கடல் முதல் கருங்கடல் வரையும்    உட்பட்ட  பிராந்தியங்களில்  நபிமார்கள் ,ஸஹாபாபெருமக்கள் சென்ற வாழ்ந்த மறைந்த இடங்களுக்கு கல்விப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தியுள்ளார்.

  அண்ணல் நபி ஸல். அவர்கள்  சிறுபிராயத்தில் தனது பெரிய தந்தை அபூதாலிபுடன்  வணிகப்பயணம் மேற்கொண்ட போது தங்கிய மிகப் பழமையான நகரான  புஸ்ரா (சிரியா). சென்று  அங்கு  பதியப்பட்டுள்ள பல வரலாற்றுத்தடங்களை நேரடி ஆய்வு நடத்தியுள்ளார  (  ஆய்வுக்கட்டுரை )

  "ஹிம்ஸ்" நகர் இதுவும் மிகப்பழமை வாய்ந்த நகர் இங்கும் ஆய்வு நடத்தியுள்ளார் , இங்குதான் வீரத்தளபதி  ஹஸ்ரத் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் மற்றும் பல சஹாபாபெருமக்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர்.

  நூலாசிரியர் கட்டுரையாளர் காஜியார்

மஸ்ஜித் பரிபாலனம் செய்யும் ஜமாஅத் நிர்வாகிகளின் தகுதிகள்"
இவர்   எழுதிய  மஸ்ஜித்  பரிபாலனம்  செய்யும் ஜமாஅத்  நிர்வாகிகளின்  தகுதிகள்  என்ற  நூல்  தமிழ்  இலக்கியத்தின் இத்துறையிலான முதல் நூல் ஆக கருதப்படுகிறது இந்நூலை தழிழ் நாடு வக்ப்  வாரியம் (Tamil Nadu Govt. Wakf  Board ) வெளியீடான  இஸ்மி  1987  இல் முழுமையாக வெளியிட்டது

  இந்நூலுக்கு முன்னுரை  வழங்கியவர்கள் ஜமாதுல்  உலமா மாத இதழ் ஆசிரியர் மர்ஹூம் மவ்லவி அபுல் ஹசன் சாதலி நூரிய்யி பாஜில்  பாகவி ,மத்ரஸா  அரூஸியா  முன்னாள் முதல்வர் மர்ஹூம்  மவ்லவி மவ்லா முகைதீன் நூரிய்யி , புதக்குடி  மத்ரஸா  அன்வாருல்  உலூம்  முன்னாள் முதல்வர் மர்ஹூம் மவ்லவி முஹம்மது ஜியாவுத்தீன் ,பேராசிரியர்  K.M.  காதர் முகைதீன் M.A.,  M.P.,    ஆகிய பெருந்தகைகள்

  1989 இல் மதுரையில் நடைபெற்ற ஷரீஅத் பஞ்சாயத் கன்வென்சன் மாநாட்டில்  இலவச வெளியீடான இந்நூலின் இரண்டாம்  பதிப்பு  பத்தாயிரம் பிரதி வெளிடப்பட்டபொழுது அதனை  திறனாய்வு  செய்து பாராட்டிப்  பேசியவர் நாவலர் ஏ.எம் . யூசுப் சாஹிப் ஆவார் மேலும் இந்நூலை தமது மறுமலர்ச்சி வார  இதழில் சமுதாயம் பலனடைய தொடர் கட்டுரையாக வெளியிட்டார் இம் மாநாட்டில் முஸ்லிம் லீகின் மாநில ,  அகில  இந்திய தலைவர்கள் , மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

  திரு குர்ஆன்  ஹதீஸ்  அடிப்படையில்  அமைந்துள்ள இந்நூல் தமிழுலகில் மஸ்ஜித் பரிபாலன  செய்வது  பற்றிய விழிப்புணர்வையும் சீர்திருத்த சிந்தனையும் ஊட்டியது

 
குழப்பம் விளைவிக்கும் நாசச்செயல்: எட்டு மாத தொடர் கட்டுரை - அச்சமயம் வெளிவந்த  மலர்மதி  மாத இதழில் வெளிவந்தது 1987

  இஸ்லாத்தில் உறவினரும்  அண்டைவீட்டாரும்  என்ற நூலும் எழுதியுள்ளார் 1986

  1976 இல் இருந்து இஸ்லாமிய மார்க்கம் சமூகம் , கல்வி சார்ந்த கட்டுரைகளை ஏடுகளில்  எழுதியும் , பிரசுரங்களாக வெளிட்டும் வருகிறார் .

  நாளிதழ்களான
மணிச்சுடர், தினமணி ஆகியவற்றிலும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவருகிரார்

  மார்க்கம் , சமுதாய  கல்விச்சேவை

  காஜி பிரதிநிதி

  1990  ஆம் ஆண்டு கீழ்க்கரையில் புதுப்பித்து  நிர்மாணம் செய்யப்பட்ட கிழக்குத்தெரு அப்பா  பள்ளிவாசல்  திறப்பு விழாவிற்கு  தலைமை வகித்த  தமது மாமனார் ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம்  பாஜில்  நூரிய்யி   அவர்கள் சார்பில்  அவர்களின் பிரதிநிதியாக அவர்களின் தலைமைவுரையை  அரபியிலும்  தமிழிலும்  நிகழ்த்தினார்.  

ஹழ்ரத்  காஜி  அல்  ஹாஜ்  முஹம்மது அப்துல் காதர் ஆலிம்  அவர்கள்  வழங்கிய   இஜாசத்    அடிப்படையில்   அவர்களின்  பிரதிதியாக  1995  முதல்  ஊர் மஹல்லா  ஜமாஅத்துகளில் பதிவு செய்யப்படும்  நிக்காஹ்களை நடத்திவைக்கும் பணியினைத்தொடங்கினார்

ேலும் காஜியின் பிரதிநிதியாக பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன் ஜும்ஆ மஸ்ஜிதில்  பெருநாள் தொழுகையும் நடத்திவந்தார்.
 

1981 தொடங்கப்பட்ட அபுதாபி அய்மான் (அபுதாபி இந்திய முஸ்லிம் சங்கம்) த்தின் ஸ்தாபக உறுப்பினராக இடம்பெற்று சன்மார்க்க, சமுதாய மற்றும் கல்விப்பணிகளை செய்துவந்த இவர் இச்சங்கத்தில் பல ஆண்டுகளாக மார்க்கத்துறை செயலாளராக சேவையாற்றியதுடன் அதன்  துணைப்பொதுச்செயலாளராக  ,  பொருளாளராக பொதுச்செயலாளராக, தலைவராக   சேவையாற்றியுள்ளார்.

 அமீரக தமிழ் நாடு ஜமாதுல் உலமா  சபையின்  நிறுவனர்களில் ஒருவரான இவர் அதன் துணைததலைவராக, பத்வாகுழு உறுப்பினராக சேவையாற்றியுள்ளார்
 

அமீரக  காயிதே  மில்லத்  பேரவையின்  நிறுவனர்களில் ஒருவரான இவர் அதன் ஸ்தாபக பொதுச்செயலாளராக சேவையாற்றியுள்ளார்

  பள்ளி  மாணவ  காலத்தில் நூலக செயலராக இலக்கிய மன்ற செயலராக  பாளையங்கோட்டை  சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் சாரண இயக்க அணித்தலைவராக சேவையாற்றி பயிற்சிபெற்றுள்ளார்.

  பல  விழாக்கள்,கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில்  தலைவராக, சிறப்பு சொற்பொழிவாளராக,  தனித்தலைப்புகளிலும்  சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்

  புனித ஹரம் ஷரீபில் "கஃபத்துல்லாஹ்"  முன்னிலையில் உரை நிகழ்த்தும் வாய்ப்பினை  பெற்றுள்ளார்

 

  உறுப்பினர்  ( Life Member )


1. தமிழ்  நாடு  வரலாற்றுப் பேரவை,  Tamil Nadu History  Congress,.
2.தமிழ் நாடு தொல்லியல் கழகம், Tamil Nadu   Archaeological Society, (Thanjavur  Tamil  University , India.)
3.  இராமநாதபுர தமிழ் சங்கம் ,
4.  இஸ்லாமிய தமிழ் இலக்கிய பேரவை

  சன்மார்க்கப் பிரச்சார சபை அமைப்பாளர்


  1976   இல்  சன்மார்க்கப்  பிரச்சார  சபையை  தோற்றுவித்து அதன்  மூலம்  மார்க்க  பிரசுரங்களை வெளியிட்டுள்ளார்.   இதன் மூலம் பல இளைஞர்கள் சன்மார்க்க சமுதாயப்பணிக்கான பயிற்சியை இவரிடம் பெற்றுள்ளனர்


 
இஸ்லாமிய பாரம்பரிய கலாச்சார கண்காட்சி

  2000  இல்  கீழக்கரை  சதக்கதுன்  ஜாரியா  பள்ளியில் இஸ்லாமிய பாரம்பரிய   கலாச்சார  கண்காட்சி  நடத்தினார் இதில் 400 ஆண்டுக்கு முன்புள்ள  திரு குர்ஆன்  கையெழுத்துப்பிரதி முதல் சமீபத்தில் வெளியிடப்பட்ட பிரதிகள்வரை பார்வைக்காக வைக்கப்பட்டது

  கீழக்கரையின்  தொன்மையான  வணிகமான  முத்து வணிகத்திற்குப்  பயன்  படுத்தப்பட்ட  உபகரணங்கள்  மிகப்பழமையான    நூல்கள்   கையேட்டுப்பிரதிகள்   ஓலைச்சுவடிகள்  பல  அற்புதமான  பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டது.

  இதன்  மூலம் கீழக்கரையின்  இஸ்லாமிய  பாரம்பரிய கலாச்சாரத்தின்  வெளிப்பாடுகளை  மக்கள்  காணவும் உணரவும் முடிந்ததுடன் இவைகளைப்பாதுகாக்க வேண்டும் என்கின்ற சிந்தனையும் உருவானது

  ஹஜ் பயிற்சியாளர


  1990   ஆண்டு முதல்    ஹஜ்,   உம்ரா   செல்வோருக்கான    வழிகாட்டு   நெறிபோதனை  வகுப்புகளை  நடத்திவருகிறார்,    இஸ்லாமிய  வரலாற்று  ஆய்வாளராக  இருப்பதால்  ஹஜ் செல்வோர் காணும்  வரலாற்று  சிறப்புமிகு இடங்கள் குறித்து  சிறப்பு விரிவுரை  நடத்திவருகி்றார்,

  இவர்  1989  இல் ஹஜ்ஜை நிறைவேற்றியதுடன்,1995 இல் உம்ரா செய்தும், 2000 இல் தமது  தந்தையார்  மர்ஹும்   முஹம்மது  செய்ய்து  அஹ்மது  நெய்னா அவர்களுக்காகவும்
ஹஜ் செய்தார்

இப் பயணத்தில் தமது மாமா ஹழ்ரத்  காஜி  அல்ஹாஜ் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களுடன் ஹஜ் சென்ற இவர் ஸன் சைன  ஹஜ்  சர்வீஸ்   குரூப்  மற்றும்  பல  ஹஜ்  குழு  கூடிய   அரபா  மற்றும்  முஜ்தலிபா மைதானத்தில்  தொழுகைகளுக்கு   இமாமத் செய்யும் வாய்ப்பை பெற்றார்.  2003 , 2009 ஆண்டு  உம்ராவையும் நிறைவேற்றினார்  இவ்வனுபவங்கள்  இவரை மேலும் ஹஜ் போதனை செய்ய ஊக்கப்படுதியது

  குவிஸ் மாஸ்டர்  ( Quiz  Master )

 இஸ்லாமிய   பொது  அறிவு   பற்றிய  பள்ளி  மாணவர்களுக்கான   குவிஸ்   மற்றும்  பொதுமக்கள்  கலந்துகொள்ளும்   வினாடி  வினா  பேட்டிகளை   பொது அமைப்புகள்  மூலம் நடத்திய இவர்  பள்ளி மாணவ காலத்தில்   மாநிலம் தழுவிய அளவில் அகில இந்திய வானொலி (All India Radio) நடத்திய போட்டியில்  முதலிடம் பெற்ற வெற்றியாளர் ஆவார். டாக்டர் அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்கள் 1975 இல்  நடத்திய  பள்ளி மாணவர்களுக்கான   பொது அறிவுப் போட்டியில் முதலிடத்தில் வென்றார்

 
அய்மான் மகளிர் கல்லூரி, திருச்சி.
   ( AIMAN  WOMEN’S COLLEGE FOR ARTS AND SCIENCE, TRICHY )

பெண்கள் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு இஸ்லாமிய பெண்மணிகள் இஸ்லாமிய கலாச்சார பின்னணியில் பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டது அய்மான் மகளிர் கல்லூரி. இதனை நடத்தும் திருச்சி அய்மான் கல்வி ,பொது நலசங்கத்தின் (AIMAN Education & Welfare Society)  நிறுவனர்களில்  ஒருவரான  இவர் இதன் துணைத் தலைவராகவும் விளங்குகிறார். மற்றும்  அய்மான் கல்வி அறக்கட்டளை (AIMAN Educational Trust ) துணைத் தலைவராகவும் விளங்குகி்றார்.

கீழக்கரை  இஸ்லாமிய பைதுல்மால் ஸ்தாபக செயற்குழு உறுப்பினர்

     அல்ஹாஜ் பி.எஸ்.எம்.செய்யது   அப்துல்  காதர் எம்.ஏ.பி.எல்., அவர்களின் தலைமையில் 1986  தொடங்கப்பட்ட  ஏழைகளுக்கும் சமுதயத்திற்கும்  பயன்படும் நிதி நிறுவனமான இவ்வமைப்பில் காஜி ஸ்தாபக -    செயற்குழு உறுப்பினராக இருப்பதுடன் இதன் வளர்ச்சிக்கும் சேவையாற்றிவருகிறார்
 

இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டள  ( Islamic Cultural Trust )

   சீதக்காதி  அறக்கட்டளை தலைவர் டாக்டர்  அல்ஹாஜ்   பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின்   தலைமையில் 2008 இல் தொடங்கப்பட்ட இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை இன் டிரஸ்டிகளில் ஒருவர் ஆவார்


 நடுவர்

    மத்ரஸா,  பள்ளிக்கூடங்களில்   நடைபெறும் மாணவர்களுக்கான  போட்டிகளில்  நடுவராகவும்  பொது மக்கள்  மற்றும்  உலமா  பெருமக்களுக்கான  அமீரகம்  நாடு தழுவிய அளவில்  ETA,ASCON & STAR நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஸலாஹுத்தீன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும்  துபை ஈமான் சங்கம்  நடத்திவரும்   மீலாது  விழா  பேச்சுப்  போட்டிகளில் 1995 ஆண்டு முதல்  தொடர்ந்து நடுவராகவும் இருந்து வருகிறார்


  நகர் மீலாது விழாக்குழு செயலாளர்.

  1985,1990,1996  ,2000 ஆகிய  ஆண்டுகளில்  கீழக்கரை  அனைத்து  மஹல்லா  ஜமாஅத்துகள் சார்பில்  நடுத்தெரு  ஜும்ஆ  மஸ்ஜித்   ஜமாஅத்  பொறுப்பேற்று   நடத்திய    மீலாது விழாவான  அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின பெருவிழாவின் செயலாளராக  சிறப்புடன் சேவையாற்றியுள்ளார்.
     1985 ஆம்ஆண்டு கீழக்கரையில் திரு குர்ஆன் மாநாட்டின் அமைப்பாளராக இருந்து விழாவினை சிறப்புடன் நடத்தியுள்ளார்
 
  

 நகர் மீலாது விழாநகர் மீலாது விழா தலைமை

2005 ஆம் ஆண்டு   நடைபெற்ற அனைத்து ஜமாஅத்கள்  சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்று நடத்திய  பொறுப்பேற்று கடற்கரைப்பள்ளி வளாகத்தில் நடத்திய மீலாது விழா இவரது தலைமையில்  நடைபெற்றது
   

2008 ஆம் ஆண்டு   நடைபெற்ற அனைத்து ஜமாஅத்கள்  சார்பில் நடுத்தெரு ஜும்ஆ பள்ளி பொறுப்பேற்று நடத்திய  பொறுப்பேற்று ஜும்ஆ பள்ளி வளாகத்தில் நடத்திய மீலாது விழா இவரது தலைமையில்  நடைபெற்றது
   

காஜி  பொறுப்பேற்றல்...
 
     2004  ஆண்டு
ஹழ்ரத்  காஜி முஹம்மது அப்துல் காதர் ஆலிம்   தமது  பாரம்பரிய மரபுப்படி தாம் வகித்துவரும் பொறுப்புகளுக்குரிய  பிரதிநிதியாக   அறிவித்ததுடன் அதனை  அனைத்து ஜமாஅத்   கூட்டமைப்பான குத்பாகமிடடிக்கு பிரதிநிதித்து சாசனம்மாகவும் எழுதினார்கள்.
   

2004  அக்டோபர் 09   இல் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பான குத்பாகமிடடி தலைவர் டாக்டர்  அல்ஹாஜ் எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர் அவர்கள்  தலைமையில் கூடிய கமிட்டிக் கூட்டத்தில்  பெருபான்மையான ஜமாஅத்துக்கள்  இச் சாசனத்தினை ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றினர்.
 

ஹழ்ரத்  காஜி முஹம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்கள் மறைவுக்குப் பின் 31 டிசம்பர் 2006  அன்று ஜும்ஆ மஸ்ஜித் வள்ளல் சீதக்காதி மண்டபத்தில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பான குத்பாகமிடடி தலைவர் டாக்டர்  அல்ஹாஜ் எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர் அவர்கள்  தலைமையில் கூடிய  அனைத்து   மஹல்லா  ஜமாஅத்   தலைவர்கள் , நிர்வாகிகள்  பிரமுகர்கள் கூட்டத்தில் நகரின் 13 வது காஜியாக  அறிவிக்கப்பட்டு மறுநாள்  ஜும்ஆ பள்ளியில் ஹஜ்ஜு பெருநாள் குத்பாவிற்குப்பின்  காஜியாக  பொறுப்பேற்றார்.

     நிகழ்ச்சியில்  ஏற்புரை  நிகழ்த்திய  காஜி தங்கள் முன்னோர்களான காஜிகள் தங்களை     
"காதிமுஷ்   ஷரீஅத்"-  "  ஷரீஅத்தின் ஊழியர்" என அழைத்துக்கொண்ட காஜிப்பணியை அல்லாஹ் வின்  திருப்பொருத்ததிற்  கேற்ப   நிறைவேற்ற   வல்ல  அல்லாஹ்விடம்  துஆச்செய்யுமாறு  தமது  உரையில் கேட்டுக்கொன்டார்

கீழக்கரை அனைத்து ஜமாஅத்கள் வழக்கமாக ஒன்று கூடும் பெருநாள் சந்திப்பான அன்றைய தினம் உள்நாடு வேளிநாடுகளில் வாழும் நகர் வாசிகள் அதிகமானோர் இந் நிகழ்சியில் கலந்துகொண்டு புதிய காஜியாருக்கு வாழ்துக்களை தெரிவித்தனர்.

இக்காஜி தனது மாமனார் 11 வது காஜி ஹழ்ரத் அல்லாமா காஜி முஹம்மது இப்ராஹீம் பாஜில்  நூரிய்யி, தனது மாமா  12  வது  காஜி  ஹழ்ரத்  காஜி முஹம்மது அப்துல் காதர் ஆலிம்  ஆகியோரிடம்  ஷரீஅத் சட்ட தீர்வுகளுக்கான அணுகுமுறை  பயிற்சியை பெற்றுள்ளார்
 
சன்மார்க்கப் பணியினைத் தொடராக செய்துவந்த  அனுபவங்கள் ,சமுதாயப்பணிகள், கல்விப்பணிகள், பலவற்றில் களப்பணியாளராக   வழிநடத்தும்   தலைவராக, சேவையாற்றி பொது வாழ்வில் பள்ளி மாணவ பருவமுதல் அறிமுகமான  இவர்  சமுதாய மக்களிடையே ஷரீஅத் பணியாற்ற  காஜி பொறுப்பேற்றது  இவருக்கு மேலும்  எல்லாதரப்பு  மக்களிடமும் நேசத்தையும்  மக்கள் நெருக்கத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
 

                                                Kilakarai  Prayer Timing -  கீழக்கரை நகர் தொழுகை நேரங்கள்
ஜனவரி , பிப்ரவரி,  மார்ச் , ஏப்ரல் , ே , ஜூன் , ஜூலை , ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர,நவம்பர் , டிசம்பர்            Kilakarai Kazi Home Page | Introduction | Service | Events | Kazi's Biography | Previous Kazis | Mahalli -Muthavalli | Author of Books | Jamath | Nikkah Affair | Photo Gallery | Contact Us

Questions or problems regarding this web site should be directed to [CompanyEmail].
Copyright © 2002 [CompanyName]. All rights reserved.
Last modified: 04/24/10.